45. கலிய நாயனார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 45
இறைவன்: தியாகேசர்
இறைவி : வடிவுடையம்மை
தலமரம் : மகிழம்
தீர்த்தம் : பிரம தீர்த்தம்
குலம் : செக்கார்
அவதாரத் தலம் : திருவொற்றியூர்
முக்தி தலம் : திருவொற்றியூர்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : ஆடி - கேட்டை
வரலாறு : தொண்டை நாட்டில் திருவொற்றியூரில் அவதாரம் செய்தவர். பெருமானுக்கு விளக்கேற்றும் பணியைச் செய்து வந்தார். வறுமை வந்தது. கூலிக்கு எண்ணெய் பெற்று விளக்கேற்றினார். வேலையும் கிடைக்காத நிலை ஏற்பட்டது. எண்ணெய் வாங்கத் தன் மனைவியையே விலை கூறினார். எவரும் வாங்க முன் வரவில்லை. எனவே தம் உதிரத்தை கொண்டே விளக்கெரிக்க முற்பட்டார். இறைவன் காட்சி கொடுத்து ஆட்கொண்டார்.
முகவரி : அருள்மிகு. தியாகேசர் திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை – 600019
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : தொலைபேசி : 044-25733703
அலைபேசி : 9444479057

இருப்பிட வரைபடம்


திருவிளக்குத் திரியிட்டங்கு அகல்பரப்பிச் செயல்நிரம்ப
ஒருவியஎண் ணெய்க்குஈடா உடல்உதிரங் கொடுநிறைக்கக்
கருவியினால் மிடறரிய அக்கையைக் கண்ணுதலார்
பெருகுதிருக் கருணையுடன் நேர்வந்து பிடித்தருளி.

- பெ.பு. 4041
பாடல் கேளுங்கள்
 திருவிளக்கு


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க